ஊராட்சி செயலாளர்களுக்கு 10 நாள் ஊதியம் கிடையாது

பதிவேடுகளை சரியாக பராமரிக்காத ஊராட்சி செயலாளர்களுக்கு 10 நாள் ஊதியம் கிடையாது என்று கலெக்டர் உத்தரவிட்டார்.

Update: 2021-09-02 18:01 GMT
ஆம்பூர்

பதிவேடுகளை சரியாக பராமரிக்காத ஊராட்சி செயலாளர்களுக்கு 10 நாள் ஊதியம் கிடையாது என்று கலெக்டர் உத்தரவிட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியம் மேல்குப்பம் மற்றும் வடச்சேரி ஊராட்சி மன்ற அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், சொத்து பதிவேடு, இந்திரா நினைவு குடியிருப்பு திட்ட பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது பதிவேடுகளை சரியாக பதிவு செய்து பராமரிக்கப்படாமல் இருந்தது தெரியவந்தது. இதன் காரணமாக மேல்குப்பம் ஊராட்சி செயலாளர் குமார் மற்றும் வடசேரி ஊராட்சி செயலாளர் செல்வராணி ஆகியோருக்கு 10 நாட்களுக்கான ஊதியம் வழங்க வேண்டாம் எனவும் ஆணையைப் பெற்ற 7 நாட்களுக்குள் பதிவேடுகளை சரி செய்ய வேண்டும் எனவும், அதற்கான விளக்கத்தை வழங்கப்பட வேண்டுமெனவும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் மனவாளன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்