இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-02 17:42 GMT
காரைக்குடி, 
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி  பொது இடங்களில் விநாயகர் வைத்து வழிபாடு செய்ய தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுஉள்ளது. இதை கண்டித்து காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் முன்பு இந்து முன்னணி சார்பில் நகர் இந்து முன்னணி அமைப்பாளர் சரவணன் தலைமையில்  மாவட்ட பொதுச்செயலாளர் அக்னி பாலா முன்னிலையில் மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்