முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆற்காடு அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை ெசய்து கொண்டார்.
ஆற்காடு
ஆற்காடு அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை ெசய்து கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே சாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன் (வயது 70). இவருக்குச் சொந்தமான நிலத்தின் பட்டா எண் மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட துறைக்கு சென்று திருத்தம் குறித்து முறையிட்டு உள்ளார்.. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இதனால் விரக்தி அடைந்த தாமோதரன் இன்று காலை தனது நிலத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.