காங்கேயம், வெள்ளகோவிலில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காங்கேயம், வெள்ளகோவிலில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-09-02 16:23 GMT
காங்கேயம், 
காங்கேயம், வெள்ளகோவிலில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தற்போது உள்ள கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கோவில்களில் வழிபாடு நடத்தி இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 காங்கேயம், பழையகோட்டை சாலையில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு நேற்று காலை இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணியின் திருப்பூர் மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் கந்தசாமி, காங்கேயம் நகர தலைவர் கந்தசாமி, பா.ஜ.க. நகர தலைவர் கலா நடராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
வெள்ளகோவில் 
வெள்ளகோவில் பகுதியில் விநாயகர் சதுர்த்திக்கு தடை விதித்த தமிழகஅரசை கண்டித்து நேற்று இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமையில் வெள்ளகோவில் வீரக்குமார் சுவாமி கோவில், வரதராஜ பெருமாள் கோவில், சோழீஸ்வரர் கோவில், நாட்டராய சுவாமி கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ஒன்றிய தலைவர் கோபிநாத், நகர தலைவர் சதீஸ்வரன், நகர பொதுச்செயலாளர் தினேஷ் குமார், உட்பட ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தாராபுரம்
தாராபுரத்தில் இந்து முன்னணியினர் பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கு போலீசார் மற்றும் தமிழக அரசு அனுமதி மறுத்ததை கண்டித்து இந்து முன்னணியினர் 32 கோவில்கள் முன்பு சூடம் ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் 
திருப்பூர் கோட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் புதிய போலீஸ் நிலையம் எதிரே உள்ள தண்டபாணி முருகன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் 50-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர்,

மேலும் செய்திகள்