கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
உடுமலை:
உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில் கடந்த மாதம் (ஆகஸ்டு) ஹிரோஷிமா நாகசாகி தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் இணைய வழியில் நடத்தப்பட்டது. இந்தபோட்டிகளில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தனர். அதிலிருந்து 40 படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதில் உடுமலை பகுதியில் இருந்து 1-ம்வகுப்பு முதல்5-ம் வகுப்பு வரையுள்ளபிரிவினருக்கான ஓவியப்போட்டியில் எஸ்.கே.பி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிமாணவர் தர்ஷித் 2-வது இடமும், பெத்தேல் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவிஷெர்லின் 3-வதுஇடமும், இதேபள்ளி மாணவி அஸ்வினி ஆறுதல் பரிசுக்கான இடமும் பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா உடுமலை காந்தி நகரில் உள்ள கலிலியோ அறிவியல் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கலிலியோ அறிவியல் கழக உறுப்பினர் கு.சதீஷ் குமார் வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கு.கண்ணபிரான் செய்திருந்தார்.