லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சின்னமனூர்:
சின்னமனூரில் உள்ள அக்ரஹாரம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த வைகை அணை அருகே உள்ள கரட்டுப்பட்டியை சேர்ந்த பாரதி (வயது 25), சின்னமனூரை சேர்ந்த நாகராஜ் (56) ஆகியோரை போலீசார் சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தனர். இதில் அவர்கள் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட 1,340 லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.