ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. மகிழ்ச்சியாக இருப்பதாக மாணவ- மாணவிகள் கலெக்டரிடம் தெரிவித்தனர்.

Update: 2021-09-02 01:00 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. மகிழ்ச்சியாக இருப்பதாக மாணவ- மாணவிகள் கலெக்டரிடம் தெரிவித்தனர்.

பள்ளி, கல்லூரிகள் திறப்பு

தமிழகத்தில் 9, 10, 11, 12-ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளை கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 216 பள்ளிகள் திறக்கப்பட்டது.

வாலாஜா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்மூர், வேலம் அரசு மேல்நிலைப் பள்ளிகள், கீழ் புதுப்பேட்டையில் உள்ள பிரைட் மைண்ட் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆகிய பள்ளிகளில் கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேரில் சென்று பார்வையிட்டார்.

மகிழ்ச்சியாக உள்ளது

மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது குறித்து மாணவ- மாணவிகளிடம் கேட்டார். அதற்கு ஆசிரியர்கள் நேரடியாக கல்வி கற்பிக்கும் போது நண்பர்களுடன் இணைந்து சந்தேகங்களை கேட்டறிந்து நிவர்த்தி செய்து கொள்ள முடிகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களை சந்திப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என மாணவ- மாணவிகள் தெரிவித்தனர்.

ஆய்வின்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா, மாவட்ட கல்வி அலுவலர் அருளரசன், தாசில்தார் ஆனந்தன் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

ஆற்காடு

ஆற்காட்டில் மாணவ- மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு ஆர்வமுடன் வந்தனர். அவர்களுக்கு முக கவசம், கை கழுவ சானிடைசர் வழங்கப்பட்டு, உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. 

சுழற்சி முறையில் வகுப்பறைகளில் தலா 20 முதல் 25 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட்டனர். ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அரக்கோணத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

வாலாஜா

மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வாலாஜா பெண்கள் மேல்நிலைபள்ளியில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் அனிதா, தலைமை ஆசிரியை மணிமேகலை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தசரதன், தாசில்தார் ஆனந்தன், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்