குமரியில் இன்று 104 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
குமரி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) 104 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) 104 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது.
இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தடுப்பூசி முகாம்கள்
குமரி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) 104 இடங்களில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது. அதாவது செண்பகராமன்புதூர், குருந்தன்கோடு, ராஜாக்கமங்கலம், கிள்ளியூர், தூத்தூர், இடைகோடு, குட்டக்குழி, கோதநல்லூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஆன்லைனிலும், 60 வயதிற்கு மேற்பட்டவா்கள் மற்றும் இருதய நோய், நீரழிவு நோய், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கும் நேரடி டோக்கன் முறையிலும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.
புத்தளம் அரசு தொடக்கப்பள்ளி, சுசீந்திரம் அரசு தொடக்கப்பள்ளி, மார்த்தாண்டம் மாதவிலாஸ் நடுநிலைப்பள்ளி, குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய இடங்களில் அனைவருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது. குழித்துறை அரசு ஆஸ்பத்திரி, கோட்டார் கவிமணி பள்ளி ஆகியவற்றில் வெளிநாடு செல்வோருக்கான கோவிஷீல்டு தடுப்பூசி நேரடி டோக்கன் மூலம் போடப்படும்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள்
தோவாளை, தடிக்காரன்கோணம், ஆரல்வாய்மொழி, அருமநல்லூர், அழகப்பபுரம், கொட்டாரம், மருங்கூர், சிங்களேயபுரி, கணபதிபுரம், குருந்தன்கோடு, வெள்ளிச்சந்தை, நடுவூர்கரை, முட்டம், குளச்சல், திருவிதாங்கோடு, பள்ளியாடி, ஒலவிளை, பத்மநாபபுரம், கீழ்குளம், நட்டாலம், உண்ணமலைக்கடை, குழித்துறை, மேல்புறம், பத்துகாணி, பளுகல், களியக்காவிளை, முன்சிறை, ஆறுதேசம், கொல்லங்கோடு, தேங்காப்பட்டணம் மற்றும் நாகர்கோவிலில் கிருஷ்ணன்கோவில், வடசேரி, வட்டவிளை, வடிவீஸ்வரம், தொல்லவிளை ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இருதய நோய், நீரழிவு நோய், கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கும் நேரடி டோக்கன் மூலம் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் கிள்ளியூர், கீழ்குளம், நட்டாலம், உண்ணாமலைக்கடை, குழித்துறை ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேரடி டோக்கன் முறையில் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
அரசு ஆஸ்பத்திரிகள்
ஆசாரிபள்ளம், பூதப்பாண்டி, கன்னியாகுமரி, சேனம்விளை, கருங்கல், குளச்சல், குலசேகரம், அருமனை, பத்மநாபபுரம் ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளிலும், தடிக்காரன்கோணம் சி.எம்.எஸ். உயர்நிலைப்பள்ளி, பூதப்பாண்டி ஜீவா அரசு உயர்நிலைப்பள்ளி, திருப்பதிசாரம் அரசு உயர்நிலைப்பள்ளி, கோட்டையடி அரசு தொடக்கப்பள்ளி, குலசேகரம் அரசு தொடக்கப்பள்ளி, மருங்கூர் அரசு நூலகம், அஞ்சுகிராமம் மனோன்மணியம் கலைக்கல்லூரி, அகஸ்தீஸ்வரம் லயோலா பொறியியல் கல்லூரி, அன்னை வேளாங்கன்னி பொறியியல் கல்லூரி, தேரூர் கஸ்தூரிபாய் நடுநிலைப்பள்ளி, புத்தேரி அரசு தொடக்கப்பள்ளி, சூரப்பள்ளம் அரசு தொடக்கப்பள்ளி, இலந்தையடிதட்டு மினிகிளினிக், என்.எம்.சி. புளியடி, மார்த்தாண்டம் மாதவிலாஸ் அரசு நடுநிலைப்பள்ளி, மணவிளை அருணாச்சலா கல்லூரி, சுங்கான்கடை ஸ்ரீ அய்யப்பா மகளிர் கல்லூரி, திங்கள்சந்தை தேவசம் மேல்நிலைப்பள்ளி, பிளாங்காலை அரசு உயர்நிலைப்பள்ளி, இட்டகவேலி அரசு நடுநிலைப்பள்ளி, மலவிளை அரசு தொடக்கப்பள்ளி, திற்பரப்பு அரசு தொடக்கப்பள்ளி, காட்டாவிளை இ- சேவை மையம், முளகுமூடு குழந்தை ஏசு கல்லூரி, திருவிதாங்கோடு முஸ்லிம் கலை கல்லூரி, முட்டைக்காடு அரசு தொடக்கப்பள்ளி, மடிச்சல் அரசு நடுநிலைப்பள்ளி, தும்பாலி புனித சேக்ரட் தொடக்கப்பள்ளி, சிலுவைபுரம் புனித ஜோசப் தொடக்கப்பள்ளி மற்றும் நாகர்கோவிலில் வெட்டூர்ணிமடம் புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளி, மீனாட்சிபுரம் பஸ் நிலையம், கோட்டார் ரெயில் நிலையம், மேலராமன்புதூர் அன்பர் அரங்கம், குளத்தூர் காலனி, ஐ.சி.டி.எஸ். அருந்ததியர் காலனி ஆகியவற்றில் அனைத்து வயதினருக்கும் மற்றும் இருதய நோய், நீரழிவு நோய், கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கும் நேரடி டோக்கன் முறையில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.