அரசு போக்குவரத்துத்துறை தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அரசு போக்குவரத்து துறை அனைத்து தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு எல்.பி.எப். தொழிற்சங்க செயலாளர் பாண்டி, சி.ஐ.டி.யூ. மதுரை மண்டல துணைத் தலைவர் சிவக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் அரசு போக்குவரத்துத்துறையை தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபடும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் சிறிது நேரம் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து பஸ் போக்குவரத்து தாமதமாக செயல்பட்டது.