ஆசிரியை விபத்தில் பலி

ஆசிரியை விபத்தில் பலி;

Update: 2021-09-01 20:49 GMT
மதுரை 
கல்லூரி திறந்த முதல் நாளிலேயே பாலிடெக்னிக்் கல்லூரி ஆசிரியை விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
கல்லூரி ஆசிரியை
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஆதனூரை சேர்ந்தவர் ஆர்த்தி(வயது 21). இவரது தோழி வெள்ளியம்பட்டி குரல்மொழி(22). இவர்கள் இருவரும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியைகள். இருசக்கர வாகனத்தில் நேற்று மாலை மதுரையில் நத்தம் ரோடு வழியாக சென்றனர். 
சத்திரப்பட்டி பகுதியில் தனியார் தொழிற்சாலை அருகே சென்றபோது அந்த வழியாக வந்த 2 கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டன. 
ஆசிரியை பலி
விபத்தில் சிக்கிய காரில் ஒன்று திரும்பி அந்த வழியாக வந்த ஆசிரியைகள் சென்ற இருசக்கர வாகனத்தின் மோதியது. இதனால் இருசக்கர வாகனத்தில் இருந்து 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆர்த்தி பரிதாபமாக இறந்தார். குரல்மொழிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
சோகம்
மேலும் கார்கள் மோதிய விபத்தில் அதில் இருந்த பழனிச்சாமி, இவரது மனைவி அமுதா, மகன் அருண்குமார், மருமகள் சரண்யா, பேத்திகள் காவியா, சன்விகா மற்றும் ராதா, டிரைவர் ராமர் என 8 பேர் காயம் அடைந்தனர். இவர்களும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கல்லூரி திறந்த முதல் நாளிலேயே விபத்தில் சிக்கி கல்லூரி ஆசிரியை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்