பஞ்சாப்பில் இருந்து ஈரோட்டுக்கு ரெயிலில் 2,600 டன் கோதுமை வந்தது

பஞ்சாப்பில் இருந்து ஈரோட்டுக்கு ரெயிலில் 2,600 டன் கோதுமை வந்தது.

Update: 2021-09-01 20:36 GMT
ஈரோடு
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து பொதுமக்களுக்கு அரிசி, கோதுமை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து நெல், அரிசி, கோதுமை போன்ற தானியங்களை நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கொள்முதல் செய்து வருகிறார்கள்.  இந்தநிலையில் பஞ்சாப் மாநிலம் பட்டின்டாவில் இருந்து 2,600 டன் கோதுமை 42 பெட்டிகள் கொண்ட ரெயில் மூலமாக ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த கோதுமை மூட்டைகளை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி ஈரோட்டில் உள்ள கிடங்குகளுக்கு கொண்டு சென்றனர்.

மேலும் செய்திகள்