பூலித்தேவன் சிலைக்கு கலெக்டர் கோபால சுந்தரராஜ் மரியாதை

வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவல் கிராமத்தில் பூலித்தேவன் சிலைக்கு கலெக்டர் கோபால சுந்தரராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2021-09-01 20:35 GMT
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவலில் பூலித்தேவன் 306-வது பிறந்தநாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு கலெக்டர் கோபால சுந்தரராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பிறந்த நாள்

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா நெற்கட்டும்செவல் கிராமத்தில் விடுதலை போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவனின் நினைவு மாளிகை உள்ளது. இங்கு தமிழக அரசு சார்பில் பூலித்தேவனின் 306-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
அப்போது முழு உருவ வெண்கல சிலைக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் உதவி கலெக்டர் ஹஸ்ரத் பேகம், மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, சிவகிரி தாசில்தார் ஆனந்த், சிவில் சப்ளை தாசில்தார் திருமலைச்செல்வி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அரசியல் கட்சியினர் மரியாதை

இதேபோல் தி.மு.க., அ.தி.மு.க. அ.ம.மு.க. காங்கிரஸ், நாம் தமிழர், தமிழ் புலிகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் பல்வேறு அமைப்புகளும் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்