அண்ணன்-தம்பியை தாக்கிய தந்தை-மகன் மீது வழக்கு
அண்ணன்-தம்பியை தாக்கிய தந்தை-மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
உடையார்பாளையம்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள காக்காப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் அன்பழகன் (41) என்பவருக்கும் நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மணிகண்டனுக்கும், அன்பழகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அன்பழகன், அவரது தந்தை ரெங்கசாமி ஆகிய இருவரும் சேர்ந்து மணிகண்டன் மற்றும் அவரது அண்ணன் மோகன்ராஜ் ஆகியோரை கடப்பாரையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மோகன்ராஜ் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசில் மணிகண்டன் கொடுத்த புகாரின்பேரில், அன்பழகன், ரெங்கசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.