மோட்டார்சைக்கிள் திருடிய 3 பேர் சிக்கினர்

அம்பையில் மோட்டார்சைக்கிள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-01 19:49 GMT
அம்பை:
கல்லிடைக்குறிச்சி பகுதியில் மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதாக தேவநல்லூர் அம்மன் கோவில் தெருவை ேசர்ந்த சுடலை மகன் இசக்கிப்பாண்டி (வயது 20), கீழ தேவநல்லூர் தெற்கு தெருவைச் சேர்ந்த நாராயணராம் மகன் மற்றொரு இசக்கிப்பாண்டி (23), மேல சடைமாங்குளம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த ஈசாக்கு மகன் அருண்குமார் (23) ஆகியோரை கல்லிடைக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்