தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ; 2 பெண்கள் படுகாயம்
சாத்தூர் அருகே தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.;
சாத்தூர்,
உடனே தொழிலாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீைய அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.தீ விபத்தில் சிக்கிய சத்திரபட்டியை சேர்ந்த மாரியம்மாள் (வயது 54) படுகாயமடைந்து, சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பலத்த தீக்காயங்களுடன் ஒ.மேட்டுபட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசுவரி (55) சாத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தீ விபத்தில் ஏராளமான தீக்குச்சிகள் மற்றும் தீ குச்சிகளை சலிக்கும் மூன்று எந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.