ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்;

Update: 2021-09-01 17:36 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே வஞ்சியாபுரம் பிரிவில் ஒரு காரில் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். 

பின்னர் காரில் இருந்த அரிசி மூட்டையை பிரித்து பார்த்த போது, ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. ஆனால் அங்கு யாரும் இல்லை. இதையடுத்து காரில் 20 மூட்டைகளில் இருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். 

பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வந்து, கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. 

மேலும் போலீசார் வருவதை தெரிந்ததும் கடத்தல்காரர்கள் காரை அங்கேயே காரை விட்டு விட்டு சென்றதும் தெரியவந்தது. இதற்கிடையில் கார் பதிவு எண்ணை வைத்து போலீசார் அரிசியை கடத்தி வந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்