கழிப்பிடத்தில் வழுக்கி விழுந்த காவலாளி சாவு

தேனி அருகே தனியார் மில்லில் கழிப்பிடத்தில் வழுக்கி விழுந்த காவலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-09-01 17:31 GMT
தேனி: 

தேனி அருகே உள்ள கூழையனூர் நடுத்தெருவை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவர் தேனியில் உள்ள ஒரு தனியார் மில்லில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இவர் மில்லில் உள்ள கழிப்பிடத்தில் வழுக்கி விழுந்தார். இதில் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவருடைய மனைவி மாரியம்மாள் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்