கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி 41 பேருக்கு பாதிப்பு உறுதி
டலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியானார்கள். புதிதாக 41 பேருக்கு பாதிப்பு உறுதியானது.;
கடலூர்,
41 பேருக்கு பாதிப்பு
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 62 ஆயிரத்து 290 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 41 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் சென்னையில் இருந்து விருத்தாசலம் வந்த ஒருவர், நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 11 பேர், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 29 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 60 ஆயிரத்து 941 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று 47 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்டத்தில் இது வரை 835 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று மேலும் 4 பேர் உயிரிழந்தனர்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
4 பேர் பலி
கம்மாபுரத்தை சேர்ந்த 72 வயது முதியவர், குமராட்சியை சேர்ந்த 79 வயது முதியவர் ஆகிய 2 பேரும் சென்னை தனியார் மருத்துவமனையிலும், மங்களூரை சேர்ந்த 50 வயது ஆண் பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், 70 வயது முதியவர் கடலூர் அரசு மருத்துவமனையிலும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 4 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
கொரோனா பாதித்த 441 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 62 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மாவட்டத்தில் கட்டுப்பாட்டு 6 ஆக அதிகரித்தது.