மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

Update: 2021-09-01 17:18 GMT
கூடலூர்,

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து கூடலூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு தொ.மு.ச., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும், தனியார்மயமாக்கப்பட்டால் தொழிலாளர்களின் பணி பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும், எனவே தனியார்மயமாக்கும் உத்தரவுகளை திரும்பி பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் தொ.மு.ச., ஏ.ஐ.டி.யு.சி. உள்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்