அரூரில் பள்ளி திறந்த முதல் நாளிலேயே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி 9 ம் வகுப்பு மாணவன் சாவு

அரூரில் பள்ளி திறந்த முதல் நாளிலேயே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி 9 ம் வகுப்பு மாணவன் இறந்தான்.

Update: 2021-09-01 16:49 GMT
அரூர்,

அரூர் அருகே உள்ள முத்தானூரை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் கன்னியப்பன் (வயது15). இவன் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். மாணவன் நேற்று பள்ளி முடிந்த பின்னர் மாலை 4 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டான். அரூர் அரசு, பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மாணவன் கன்னியப்பன்  பலத்த காயம் அடைந்தான். உடனே அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் மாணவன் பரிதாபமாக இறந்தான். இந்த விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் விஜய பாஸ்கர் என்பவரை கைது செய்தனர். பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளிலேயே விபத்தில் சிக்கி மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்