அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பழனி:
கண்டன ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதன்படி சாணார்பட்டி தெற்கு, வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கோபால்பட்டி பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. மாநில ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளரும், நத்தம் ஒன்றியக்குழு தலைவருமான ஆர்.வி.என்.கண்ணன் தலைமை தாங்கினார். சாணார்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ராமராஜ் முன்னிலை வகித்தார்.
திண்டுக்கல் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளர் இளம்வழுதி, ஒன்றிய கவுன்சிலர்கள் ரமேஷ்பாபு, ஹரிஹரன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பழனி
பழனி பஸ் நிலைய ரவுண்டானா அருகே, அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேணுகோபால், குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அ.தி.மு.க. பிரமுகர் ரவிமனோகரன், இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்வர்தீன், நகர ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ராஜாமுகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல் பழனி மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துசாமி தலைமையில் நெய்க்காரப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழனி கிழக்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன் தலைமையில் ஆயக்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நத்தம்
நத்தம் பஸ்நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜெயலலிதா பேரவை மாநில இணைச்செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ராமராஜ், மணிகண்டன், சின்னு, நகர செயலாளர் சிவலிங்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நகர பேரவை செயலாளர் சேக்தாவூது, மாவட்ட மாணவரணி இணை செயலாளர் அசாருதீன், நகர அவைத் தலைவர் சேக்ஒலி, பொருளாளர் சீனிவாசன், மாவட்ட கவுன்சிலர்கள் சின்னாக்கவுண்டர், பார்வதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் வேலம்பட்டி கண்ணன், சவரிமுத்து, ஆண்டிச்சாமி, ஜெயப்பிரகாஷ், சுப்பிரமணி உள்ளிட்ட ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கன்னிவாடி
கன்னிவாடி பஸ் நிலையம் அருகே, ரெட்டியார்சத்திரம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆர்.கே. சுப்பிரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் வெங்கடாசலம், கூட்டுறவு வங்கி தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அ.தி.மு.க. பிரமுகர்கள் சூடாமணி, நல்லமுத்து, முத்துவிநாயகம், கார்த்திகேயன், பழனிச்சாமி, சுரக்காய்பட்டி பாண்டி, கிருஷ்ணமூர்த்தி, பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சின்னாளப்பட்டி
ஆத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், சின்னாளப்பட்டியில் ஒன்றிய செயலாளர் மயில்சாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்று பேரூராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுகன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் விஜயபாலமுருகன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கிரஷர் பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிலக்கோட்டை
நிலக்கோட்டை நால்ரோட்டில் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, முன்னாள் எம்.பி. உதயகுமார், அம்மையநாயக்கனூர் நகர செயலாளர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதற்கிடையே நால்ரோடு பகுதியில் முன்னாள் எம்.பி. உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. தங்கத்துரை, ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் மூர்த்தி, ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் சீனிவாசன், நிலக்கோட்டை நகர பொருளாளர் சரவணன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணகுமார், ஒன்றிய அவைத்தலைவர் தவமணி, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
---------