மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி பகுதியான கொங்கு மெயின்ரோட்டில் அம்பேத்கர் காலனி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த இடம் மாநகராட்சி சொந்தமான இடம் என்றும், இதனால் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அந்த பகுதியில் உள்ள வீடுகளை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் சென்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பேத்கர்நகர் காலனி பகுதி மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் திரண்டனர். தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி கமிஷனரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஆக்கிரமிப்பு தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கு தீர்ப்பின்படி நடக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.