தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

புளியங்குடி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-08-31 21:34 GMT
புளியங்குடி:
புளியங்குடி அருகே உள்ள மலையடிக்குறிச்சி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த கருத்தப்பாண்டி மகன் முத்துக்குமார் (வயது 29). இவருக்கு திருமணமாகி அமுதா என்ற மனைவியும், ஒரு ஆண், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். முத்துக்குமார் கேரளா மாநிலத்தில் மின்சார கோபுரம் அமைக்கும் பணியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். முத்துக்குமாரின் மனைவி 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்து வருகிறார். 100 நாள் வேலை திட்டத்தின் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று முத்துக்குமார் அவரது மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அமுதா தொடர்ந்து 100 நாள் வேலை திட்டப்பணிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் விடுமுறையில் கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு முத்துக்குமார் வந்தார். சம்பவத்தன்று இரவு முத்துக்குமார் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தபோது அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனஉளைச்சல் அடைந்த முத்துக்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த புளியங்குடி போலீசார் முத்துக்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்