சங்கரன்கோவில் கோமதி யானையை நன்கு பராமரிக்க ஆராய்ச்சியாளர் ஆலோசனை

சங்கரன்கோவில் கோமதி யானையை நன்கு பராமரிக்குமாறு ஆராய்ச்சியாளர் ஆலோசனை வழங்கினார்.

Update: 2021-08-31 21:29 GMT
சங்கரன்கோவில்:
தமிழக அரசு சார்பில் கோவில்கள் மற்றும் தனியார்களிடம் உள்ள யானைகளின் உடல்நிலை மற்றும் யானைகள் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் உள்ள கோமதி யானையை மாநில வன குழு உறுப்பினரும், யானைகள் ஆராய்ச்சியாளருமான மயிலாடுதுறையை சேர்ந்த சிவகணேஷ் ஆய்வு செய்தார். இதில் 5 நிமிடத்திற்கு ஒரு முறை யானை உட்கொள்ளும் உணவின் அளவு, யானையின் வால் ஆடும் அளவு, யானைப்பாகன் சொல்வதை யானை புரிந்து கொள்ளும் திறன் என்பன உட்பட பல சோதனைகளை செய்தார்.
மேலும் கோவில் யானைப் பாகன் சணல்குமாரிடம் யானைகளை பராமரிப்பது குறித்து சிவகணேஷ் அறிவுரைகள் வழங்கினார். அப்போது யானை கட்டுவதற்கு 2 ஏக்கர் பரப்பளவில் மரங்களுடன் கூடிய நந்தவனம் அமைத்து யானையை அங்கு தான் நிறுத்த வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்