கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்த அரசு ஊழியர்கள்

கருப்பு பட்டை அணிந்து அரசு ஊழியர்கள் பணிபுரிந்தனர்.

Update: 2021-08-31 20:54 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில், நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட கருவூலம், கல்வித்துறை, கூட்டுறவுத்துறை, நெடுஞ்சாலைத்துறை அலுவலகங்கள், வணிகவரித்துறை மற்றும் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் தங்களது உடையில் கறுப்பு பட்டை அணிந்து பணிபுரியும் இயக்கம் நடத்தினர். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சவீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.  மேலும் கோரிக்கையை வலியுறுத்தி ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி இடையே தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய கருப்பு நிற பட்டையை அணிந்திருந்தனர். இதில் திரளான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்