குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலைமறியலுக்கு முயன்ற பெண்கள்
இடிந்தகரையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியலுக்கு திரண்டனர்.
கூடங்குளம்:
கூடங்குளம் அருகே இடிந்தகரை கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக சீரான முறையில் குடிநீர் வழங்கப்படவில்லையாம். இதுபற்றி இடிந்தகரையில் ஊராட்சி அலுவலகத்தில் புகார் செய்தனர். ஆனாலும் சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் நேற்று காைல காலிக்குடங்களுடன் சாலைமறியல் செய்ய திரண்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஊராட்சி செயலாளர் பாஸ்கர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மெயின் குழாயில் உடைப்பு சரி செய்யப்பட்டு குடிநீர் வழங்கப்படும், என தெரிவித்தார். இதனால் சமாதானம் அடைந்த பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.