கார் மோதி மூதாட்டி பலி; சிறுமி படுகாயம்

சிவகாசி அருகே கார் மோதியதில் மூதாட்டி பலியானார். சிறுமி படுகாயம் அடைந்தார்.

Update: 2021-08-31 20:44 GMT
சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள கொங்கலாபுரத்தை சேர்ந்தவர் வசந்தா (வயது 60). இவர் தனது பேத்தி ஸ்ரீநிதி (13) என்பவருடன் அந்த பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதியதில் வசந்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஸ்ரீநிதியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கார் ஓட்டி வந்த மண்குண்டான்பட்டியை சேர்ந்த அழகர்சாமி (51) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்