கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு

கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு குழந்தையுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-31 20:30 GMT
கரூர்,
கரூர் செல்லாண்டி பாளையத்திற்குட்பட்ட ஒத்தையூர் பகுதியை சேர்ந்தவர் வனிதா. இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று தனது மகளுடன் வந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனது கணவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். எங்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு வருடமாக எனது கணவருக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. மேலும் அவருக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது என்னிடம் தகராறு செய்து என்னை அடித்து கொடுமைப்படுத்தினார். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். அதன்பிறகு இருவரையும் விசாரித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.இந்தநிலையில் மீண்டும் அந்த பெண்ணுடன் எனது கணவர் பழகி வருகிறார். எனவே எனது கணவரை மீட்டு என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இளம்பெண் தனது குழந்தையுடன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி மனு அளித்த செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்