புதிய பஸ் நிலையத்தில் முன்பதிவு மையம் மீண்டும் செயல்பட தொடங்கியது

புதிய பஸ் நிலையத்தில் முன்பதிவு மையம் மீண்டும் செயல்பட தொடங்கியது

Update: 2021-08-31 19:34 GMT
புதுச்சேரி, செப்.1-
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, பெங்களூரு, திருப்பதி, நாகர்கோவில், மாகி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கின் காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த பஸ்கள் கடந்த 28-ந் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா உத்தரவின் பேரில் புதிய பஸ் நிலையத்தில் உள்ள, அரசு சாலை போக்குவரத்து கழக பஸ்களுக்கான முன்பதிவு மையம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இங்கு பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த தகவலை போக்குவரத்து துறை அமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதுவை புதிய பஸ் நிலையத்தில் முன்பதிவு மையம் மீண்டும் செயல்பட தொடங்கியது

மேலும் செய்திகள்