சென்டாக்கில் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
சென்டாக்கில் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, செப்.1-
சென்டாக்கில் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் நீட் தேர்வு அல்லாத படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் விண்ணப்பம் ஆன்லைன் மூலம்பெறப்பட்டு வருகிறது. இதற்கான கடைசி நாள் நேற்று என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த தேதியை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 7-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு சென்டாக் இணைய தளத்தில் காணலாம். மேற்கண்ட தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.