சிவகாசி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் சாத்தூர் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள இடுகாடு அருகில் ஒருவர் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார். அவரை அழைத்து விசாரித்த போது அவர் முஸ்லிம் ஓடைதெருவை சேர்ந்த சாகுல்அமீது மகன் நாகூர்மைதீன் (வயது 32) என தெரியவந்தது. அவர் வைத்து இருந்த பையை பரிசோதித்த போது 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.