இரும்பு வேலியில் சிக்கி மான் சாவு

இரும்பு வேலியில் சிக்கி மான் பரிதாபமாக இறந்தது.

Update: 2021-08-31 17:55 GMT
கொடைக்கானல்:
கொடைக்கானல்  பில்லர்ராக் பகுதியில் சுமார் 2 வயதுடைய சருகு மான் ஒன்று, அங்குள்ள குட்டையில் தண்ணீர் அருந்திவிட்டு திரும்பும்போது இரும்பு வேலியில் சிக்கியது. இதில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்த மான் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. 
இதுகுறித்து தகவல் அறிந்த வனவர் அழகுராஜா தலைமையிலான வனத்துறையினர், அந்த மானை மீட்டனர். பின்னர் கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் அக்கீம் உதவியுடன் பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த மானின் உடல் வனப்பகுதியிலேயே புதைக்கப்பட்டது. இறந்த மான் சினையாக இருப்பது பரிேசாதனையில் தெரியவந்தது.

மேலும் செய்திகள்