பள்ளி மாணவியை திருமணம் செய்து சித்ரவதை. போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
பள்ளி மாணவியை திருமணம் செய்து சித்ரவதை
சிப்காட்
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் 15 வயது நிரம்பிய பள்ளி மாணவியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்தார்.
கடந்த சில தினங்களாக மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டி, வேலைக்காரியை போல் நடத்தி, சாப்பாடு போடாமல் பல வகையில் சுரேஷ் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி அளித்த புகாரின்பேரில், ராணிப்பேட்டை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுகி மற்றும் போலீசார், சுரேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.