திண்டிவனம்,
திண்டிவனம் அருகே பாதிரி கிராமத்தை சேர்ந்த கன்னியப்பன் மகன் சேகர் (வயது 46). விவசாயி. நேற்று தனது நிலத்தில் உள்ள மின்மோட்டாரை இயக்க முற்பட்ட போது மின்சாரம் தாக்கி சேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த சேகருக்கு லட்சுமி(40) என்கிற மனைவியும், சீதாராமன் (19) என்கிற மகன், சங்கீதா (17) என்கிற மகள் உள்ளனர்.