ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒருவர் மட்டும் பாதிக்கப்பட்டு உள்ளார். இதுவரை ராம நாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 20 ஆயிரத்து 188 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 4 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 795 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 41 பேர் மட்டும் சிகிச் சையில் உள்ளனர். 352 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.