173 பேருக்கு கொரோனா 3 பேர் பலி

173 பேருக்கு கொரோனா 3 பேர் பலி

Update: 2021-08-31 16:30 GMT
173 பேருக்கு கொரோனா 3 பேர் பலி
கோவை

தமிழக அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் கடந்த மே மாதம் கோவை முதலிடம் பிடித்தது. கடந்த 2 வாரத்திற்கு முன்பு கோவை யை பின்னுக்குத்தள்ளி சென்னை முதலிடம் வகித்தது. ஆனால் சில நாட்களிலேயே கொரோனா பாதிப்பில் மீண்டும் கோவை முதலிடம் பிடித்தது.

 இந்த நிலையில் சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட பட்டியல்படி கோவை மாவட்டத்தில் நேற்று புதிதாக 173 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆனால் சென்னையில் 189 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தமிழக அளவில் கொரோனா பாதிப்பில் கோவை 2-வது இடத்திற்கு சென்றது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்து 77 ஆக அதிகரித்து உள்ளது. கோவை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 185 பேர் குணமடைந்தனர். 

இதன் மூலம் மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 31 ஆயிரத்து 783 ஆக அதிகரித்து உள்ளது. கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த 60 வயது பெண், 85 வயது முதியவர், 80 வயது மூதாட்டி ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

 இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 2,266 பேர் இறந்து உள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 25 பேருக்கு கொரோனா  தொற்று உறுதியானது. இதன் மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்து 758 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 34 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் இதுவரை 31 ஆயிரத்து 230 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

நேற்று கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் இறப்பு எண்ணிக்கை 195 ஆக அதிகரித்தது. தற்போது 333 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தமுள்ள 579 ஆக்சிஜன் படுக்கைகளில் 96 படுக்கைகள் நிரம்பி உள்ளது. 478 படுக்கைகள் காலியாக இருக்கிறது.

மேலும் செய்திகள்