2 வது முறையாக ஆழியாறு அணை நிரம்பியது

தொடர்மழை காரணமாக 2-வது முறையாக ஆழியாறு அணை நிரம்பியதை தொடர்ந்து 4 மதகுகள் வழியாக உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட்டது.

Update: 2021-08-31 16:20 GMT
பொள்ளாச்சி

தொடர்மழை காரணமாக 2-வது முறையாக ஆழியாறு அணை நிரம்பியதை தொடர்ந்து 4 மதகுகள் வழியாக உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட்டது.

ஆழியாறு அணை நிரம்பியது

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலம் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 42 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. 

இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 22-ந் தேதி அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது.

 எனவே பொள்ளாச்சி, வேட்டைக்காரன்புதூர் கால்வாய்கள் வழியாக குளங்கள், தடுப்பணைகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

உபரிநீர் திறப்பு

இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரித்தது. இதன் காரணமாக 120 அடி கொண்ட ஆழியாறு அணை 119.70 அடியை தாண்டி 2-வது முறையாக நிரம்பியது. 

அணைக்கு வினாடிக்கு 1,284 கனஅடி தண்ணீர் வந்தது. இதையடுத்து உபரிநீர் வீணாகுவதை தடுக்க பொள்ளாச்சி கால்வாய், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் மற்றும் மின் உற்பத்தி நிலையம் வழியாக வினாடிக்கு 625 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 

வெள்ள அபாய எச்சரிக்கை 

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி அணையின் 4 மதகுகள் வழியாக உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. 

எனவே கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்