திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெண் தீக்குளிக்க முயற்சி
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மதியம் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் கோரிக்கை தொடர்பாக மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்களில் ஒரு பெண் கலெக்டர் அலுவலக வாசல் முன்பு திடீரென்று தான் கொண்டு வந்த பையில் இருந்து மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அதற்குள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி வந்து அந்த பெண்ணிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் தீக்குளிக்க விடாமல் தடுத்து, தண்ணீரை கொண்டு வந்து அந்த பெண்ணின் மீது ஊற்றினர். மேலும் அந்த பெண் அழுதபடி நின்று கொண்டிருந்தார்.
நகை அடகு
உடனே கலெக்டர் அலுவலக அதிகாரிகள் வந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த பெண் திருப்பூர் கோல்டன் நகரை சேர்ந்த ஷாகின் (வயது 36) என்பது தெரியவந்தது. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு நகை அடகு கடையில் 10 பவுன் நகையை அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். வட்டி கட்டிய பின் கடந்த 2013-ம் ஆண்டு நகையை மீட்க இருந்த நிலையில் சம்பந்தப்பட்ட நகை அடகுக்கடை உரிமையாளர், கடையை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டார்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில போலீசார் நடவடிக்கை மேற்கொண்ட பிறகும் நகையை மீட்டுக்கொடுக்கவில்லை. கடும் சிரமத்தில் தவிக்கும் தனக்கு 10 பவுன் நகையை மீட்டுக்கொடுக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து வீரபாண்டி போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரபரப்பு
இதுபோல் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்த பலர் அதே அடகு கடையில் நகைகளை அடகு வைத்து மீண்டும் நகையை பெற முடியாமல் தவித்து வருவதாக உடன் வந்த பெண்கள் தெரிவித்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.