தொடர்மழை காரணமாகசோளிங்கர் ஏரி நிரம்பி வழிந்தது

தொடர்மழை காரணமாக ஏரி நிரம்பி வழிந்தது

Update: 2021-08-31 13:28 GMT
சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் கடந்தசில நாட்களாக மழைபெய்து வருகிறது. இதனால் பொன்னை ஆற்றில் நீர் வரத்து ஏற்பட்டு சோளிங்கர் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இந்த நிலையில் ஏரியின் கடைவாசல் மேற்கு பகுதியில் உள்ள மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறி வருகின்றது. தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் ஏரி நிரம்பி வழிவதை பார்க்க செல்கின்றனர். ஒருசிலர் தங்கள் குழந்தைகளுடன்‌ ஆபத்தை உணராமல் கடைவாசல் பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். எனவே விபத்து ஏற்படாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கடைவாசல் பகுதிக்கு யாரும் செல்லாதவாறு தடுப்பு அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்