திருவள்ளூரை அடுத்த பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-வது முறையாக கொரோனா சிறப்பு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

Update: 2021-08-31 12:24 GMT
இந்த முகாமிற்கு பிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் உமா மணிகண்டன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசன் ஆகியோர் கலந்துகொண்டு முகாமை பார்வையிட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். முகாமில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்