குடியாத்தம் அருகே தூக்குப்போட்டு ஐஸ் வியாபாரி தற்கொலை

குடியாத்தம் அருகே தூக்குப்போட்டு ஐஸ் வியாபாரி தற்கொலை

Update: 2021-08-31 12:14 GMT
குடியாத்தம்

குடியாத்தத்தை அடுத்த சின்னாலபல்லி காந்திநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50), ஐஸ் வியாபாரி. நேற்று காலை தனது வீட்டிற்கு சற்று தூரத்தில் உள்ள தட்டப்பாறை அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் ராஜேந்திரன் சேலையில் தூக்குப்போட்டு கொண்டார். இதனை பள்ளி மைதானத்தில் நடைபயிற்சிக்கு சென்ற கிராம மக்கள் பார்த்து உடனடியாக, அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். 

மேலும் குடியாத்தம் தாலுகா போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் ஆகியோர் ராஜேந்திரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்