குற்றச்செயலில் ஈடுபட சதித்திட்டம் தீட்டிய 10 பேர் கைது

கடலூர் அருகே குற்றச்செயலில் ஈடுபட சதித்திட்டம் தீட்டிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடிய பிரபல ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-08-30 20:48 GMT
நெல்லிக்குப்பம், 

கடலூர் அருகே தென்னம்பாக்கம் அழகர் கோவில் பகுதியில் தூக்கணாம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கும்பல் வட்டமாக நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தனர். 
போலீசாரை கண்டதும் ஒருவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அங்கிருந்த 6 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 

10 பேர் கைது 

விசாரணையில் அவர்கள், புதுவை மாநிலம் ஏம்பலத்தை சேர்ந்த சக்தி(வயது 22), வில்லியனூரை சேர்ந்த கார்த்தி(23), கொடத்தூரை சேர்ந்து கூத்தன்(22), வில்லியனூரை சேர்ந்த குமரேசன்(24), கரிக்கலாம்பாக்கம் ரகு(24), பார்த்திபன்(27) ஆகியோர் என்பதும், குற்றச்செயலில் ஈடுபட சதித்திட்டம் தீட்டியதும், தப்பி ஓடியது பிரபல ரவுடி தாடி அய்யனார் என்பதும், குற்றச்செயலில் ஈடுபட கூறியதும் தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதே கும்பலை சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட 4 பேர் காரணப்பட்டு அய்யனார் கோவில் பகுதியில் நின்று குற்றச்செயலில் ஈடுபட சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருந்தனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய ரவுடி தாடி அய்யனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்