ஒரே நேரத்தில் 6 குட்டிகளை ஈன்ற ஆடு

ஆலங்குளம் அருகே ஒரே நேரத்தில் ஆடு 6 குட்டிகளை ஈன்றது.

Update: 2021-08-30 20:32 GMT
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஆ.மருதப்பபுரம் அரசமரப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகையா (வயது 65). விவசாயியான இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். 
இந்த நிலையில் தான் வளர்த்து வந்த நாட்டு ரகத்தைச் சேர்ந்த வெள்ளாடு ஒன்று நிறைமாதமாக இருந்தது. நேற்று அந்த ஆடு ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 6 குட்டிகளை ஈன்றது. இதில் 3 ஆண் ஆட்டுக்குட்டிகளும், 3 பெண் ஆட்டுக்குட்டிகளும் அடங்கும். இந்த ஆட்டுக்குட்டிகள் அனைத்தும் நலமாக உள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அந்த அதிசய ஆட்டையும், அதன் குட்டிகளையும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

மேலும் செய்திகள்