ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது

ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது;

Update: 2021-08-30 19:35 GMT
திருவெறும்பூர்,ஆக.31-
திருவெறும்பூர் அருகே நவல்பட்டு பூலாங்குடி காலனியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்குள்ள ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கடந்த 19-ந் தேதி கொள்ளை முயற்சி நடைபெற்றது.  இது குறித்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் பூலாங்குடி காலனிகுறிஞ்சி தெருவை சேர்ந்த ரமேஷ் மகன் சச்சின் (வயது 21) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்தான் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். ேமலும் அவருக்கு வேறு ஏதேனும் கொள்ளையில் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்