மணல் கடத்திய மொபட்டுகள் பறிமுதல்; 2 பேர் கைது
மணல் கடத்திய மொபட்டுகள் பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தட்டாஞ்சாவடி பகுதியில் வெங்கனூர் இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 ெமாபட்டுகளில் மணல் மூட்டைகளை கடத்தி வந்த 2 பேர், போலீசாரை பார்த்ததும் மொபட்டுகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச்சென்றனர். இதையடுத்து 2 ெமாபட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய அண்ணிமங்கலம் கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தியின் மகன் முருகேசன்(வயது 28), மகேந்திரனின் மகன் நந்தகுமார்(19) ஆகியோரை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.