திருத்தங்கல் மேற்கு ரதவீதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் மகள் துர்கா தேவி (வயது9). 4-ம் வகுப்பு மாணவி. இந்த நிலையில் சிறுமி துர்காதேவியும், அவரது தாய் சத்யாவும் எம்.புதுப்பட்டி-சிவகாசி ரோட்டில் தேவர்சாலை பஸ் நிறுத்தம் அருகில் நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று துர்காதேவி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சிறுமியை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சத்யா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி காரை ஓட்டி வந்த குருசாமியை கைது செய்தனர்.