கஞ்சா புகைத்த சிறுவன் உள்பட 2 பேர் கைது

கஞ்சா புகைத்த சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-08-30 19:27 GMT
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன் பரிந்துரையின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பஸ் நிலையம் அருகே 2 பேர் ஏரிக்கரையில் கஞ்சா புகைத்து கொண்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு கஞ்சா புகைத்து கொண்டிருந்த 2 பேரை பிடித்த போலீசார், அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ஜெயங்கொண்டம் கீழத்தெருவை சேர்ந்த இளங்கோவனின் மகன் வல்லரசு (22) மற்றும் 18 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் சுமார் 20 கிராம் எடையுள்ள கஞ்சாவை சிகரெட்டிற்குள் வைத்துக் புகைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுபோன்ற பழக்கங்கள் ஏற்படுவதை தடுக்க பிள்ளைகளை, பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்று துணை சூப்பிரண்டு கலைகதிரவன் அறிவுறுத்தியுள்ளார். மேலும் தொடர்ந்து கஞ்சா விற்பனை, மது பாட்டில்கள் விற்பனை, லாட்டரி சீட்டுகள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்