நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

ராஜபாளையத்தில் ெநசவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-08-30 19:13 GMT
ராஜபாளையம்.

 ராஜபாளையம் நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள சேத்தூர், புனல்வேலி, முத்துசாமிபுரம், ஆவரம்பட்டி பகுதிகளில் 12 நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கள் இயங்கி வருகின்றன. .நெசவு தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இந்த பகுதிகளில் உள்ள 1,850 பெடல் தறிகளுக்கு, தமிழக அரசின் இலவச சேலை திட்டத்திற்கான பாவு நூல் கடந்த மாதம் 10-ந்தேதி வழங்கப்பட்டது.பாவு நூல் வழங்கப்பட்டு சுமார் 50 நாட்களாகியும், சேலை நெய்வதற்கு உரிய ஊடை நூல் இன்னும் வழங்கப்படவில்லை என நெசவாளர்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து பலமுறை கூட்டுறவு சங்க நிர்வாகிகளிடம் கேட்டும் அவர்களிடம் இருந்து உறுதியான தகவல் எதுவும் வரவில்லை என கூறப்படுகிறது.
இதனை கண்டித்தும், சேலை நெய்வதற்கு தேவையான ஊடை நூலை விரைந்து வழங்க கோரியும் பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ராஜபாளையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்