தோகைமலை பகுதிகளில் கொரோனா தொற்று பரவும் அபாயம்
தோகைமலை பகுதிகளில் முககவசம் அணியாமல் செல்லும் பொதுமக்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
தோகைமலை,
கொரோனா தொற்று
தமிழகத்தில் அதிவேகமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கு பொதுமக்கள் முக கவசம், சமூக இடைவெளி பின்பற்றாமல் இருப்பது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.இந்தநிலையில், தோகைமலை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளி பின்பற்றாமல் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். இதில் நோய் தொற்று இருப்பவர்கள் யார்? என்றும் தெரியாமலும் இருந்து வருகிறது.
விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை
தோகைமலை பகுதிகளில் அதிகளவில் சளி, இருமல், காய்ச்சல் இருப்பவர்கள் உடனடியாக சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் பொதுமக்கள் அலட்சியம் செய்து வருகின்றனர்.
எனவே சுகாதாரத்துறையினர் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.