ஆற்காடு அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

Update: 2021-08-30 18:11 GMT
ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த அனத்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 22). படித்துவிட்டு வேலை இல்லாததால் விவசாயம் செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை நிலத்திற்கு மாடுகளை ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது டிரான்ஸ்பார்மர் அருகே மின்சார வயர் அறுந்து கீழே விழுந்துள்ளது. அதனைப் பார்க்காமல் நந்தகுமார் மின்வயரை மிதித்து உள்ளார்.
 
இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் மின்சாரத்துறை மாற்றம் ஆற்காடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நந்தகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்